கத்தார் - வக்ரா பகுதியில் மாஸ்க் அணியாமல் பணியாட்களை வேலைக்கு அமர்த்திய இரண்டு நிறுவனங்கள் மீது நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (MADLSA) நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிகாரிகள் மேற்படி இரு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பதாக தெரிவித்துள்ளது. கத்தாரில் கொரோனா வைரஸ் பரவுதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியார்கள் ஒவ்வொருவரும் மாஸ்க அணிவது கட்டாயமாகும். பணியாளர்களுக்கான மாஸ்க் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது நிறுவனங்களின் பொறுப்பு என்பதாக அமைச்சு அண்மையில் அறிவித்திருந்தது.
எனவே இந்த பெறுப்பிலிருந்து விலகிய இரண்டு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கைள் எடுக்கப்படும் என்பதாக நிர்வாக மேம்பாடு, தொழிலாளர் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு (MADLSA) தெரிவித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கைகளை அனைவரும் தவறாமல் பின்பற்றும் படியும், மீறுகின்ற போது 1990ம் ஆண்டு 17ம் இலக்க தொற்று நோய்ச் சட்டத்தின் படி இரண்டு இலட்சம் றியால்கள் அபராதம் மற்றும் 3 வருடங்கள் சிறை தண்டனை போன்ற வழங்கப்படும் என்பதாக தெரிவித்துள்ளது. அத்துடன் பணியாளர்களின் தங்குமிடங்கள் மற்றும் பணியிடங்கள். தொடர்பான முறைப்பாடுகளுக்கு 40280660 தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளும் படி அனைவரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment